ஐக்கிய நாடுகள் சபையுடன் நல்லிணக்கத்தை பேண பீரிஸூக்கு ஜப்பான் அறிவுரை!
ஐக்கிய நாடுகள் சபையுடன் நல்லிணக்கத்தை பேணும் படி சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Katsuya Okada வை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இப் பேச்சுவார்த்தையின் போதே ஐக்கிய நாடுகள் சபையுடன் நல்லிணக்கத்தை பேணும் படி பீரிஸூக்கு ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் Katsuya Okada ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய கவனம் எடுக்கும் படியும் பீரிஸூக்கு ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் முயவளரலய ழுமயனய அறிவுறுத்தியுள்ளார்.
வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மனிதவுரிமை அமைப்புக்களும், சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூவரடங்கிய நிபுணர்கள் குழுவை கடந்த மாதம் நியமித்திருந்தார்.
அதேவேளை, வன்னிப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவுக்கும் எதிராக சிறிலங்கா அரசாங்கம் எல்லா வழிகளிலும் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
இந் நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையுடன் நல்லிணக்கத்தை பேணும் படியும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய கவனம் எடுக்கும் படியும் பீரிஸூக்கு ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் Katsuya Okada அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.